A welcoming church family in Mississauga — serving Tamil & English families.
மிசிசாகாவில் உள்ள வரவேற்கும் சபைக் குடும்பம் — தமிழ் & ஆங்கில குடும்பங்களுக்கு சேவை.
Praise Tabernacle is a welcoming church in Mississauga. We are a bilingual Tamil & English community that values family, respect, and genuine care.துதியின் கூடாரம் மிசிசாகாவில் உள்ள ஒரு வரவேற்கும் சபை. நாங்கள் குடும்பம், மரியாதை, அன்பான அக்கறை ஆகியவற்றை மதிக்கும் தமிழ் & ஆங்கில சமூகமாக இருக்கிறோம்.
We are centred on Jesus Christ, committed to the Bible, and passionate about prayer. Our heart is to help you take a next step - whether you're new to church, returning after a long time, or looking for a church family to call home.நாங்கள் இயேசு கிரிஸ்துவை மையமாகக் கொண்டு, வேதத்தைப் பிடித்துக் கொண்டு, ஜெபத்தில் ஆர்வமாய் வாழ விரும்புகிறோம். நீங்கள் சபைக்கு புதிதாக இருந்தாலும், நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் வந்தாலும், அல்லது ஒரு சபைக்குடும்பத்தைத் தேடினாலும் — அடுத்த படி எடுக்க நாங்கள் உதவ விரும்புகிறோம்.
Our desire is to create an atmosphere where individuals and families can grow in faith, love, and purpose - and build a meaningful relationship with Jesus Christ.தனிநபர்களும் குடும்பங்களும் விசுவாசம், அன்பு, நோக்கம் ஆகியவற்றில் வளரவும், இயேசு கிறிஸ்துவுடன் அர்த்தமுள்ள உறவை உருவாக்கவும் உதவும் சூழலை உருவாக்குவது எங்கள் விருப்பம்.
Our desire is to provide an atmosphere for personal growth and increasing love so that you and your family can build a strong foundation.நீங்களும் உங்கள் குடும்பமும் உறுதியான அடித்தளத்தை அமைத்துக்கொள்ள, தனிப்பட்ட வளர்ச்சிக்கும் வளர்ந்து வரும் அன்பிற்கும் ஏற்ற ஒரு சூழலை வழங்குவதே எங்கள் விருப்பம்.
Praise Tabernacle Church is called to proclaim the Gospel of Christ and the beliefs of the evangelical Christian faith, to maintain the worship of God, and to inspire in all persons a love for Christ, a passion for righteousness, and a consciousness of their duties to God and their fellow human beings. We pledge our lives to Christ and covenant with each other to demonstrate His Spirit through worship, witnessing, and ministry to the needs of the people of this church and the community. We stands for the Gospel be preached, the lost be found, the believers be equipped, the poor be served, the lonely be enfold into the community.கிறிஸ்துவின் சுவிசேஷத்தையும் சுவிசேஷ விசுவாசத்தின் உண்மைகளையும் அறிவிக்கவும், தேவனை ஆராதிக்கவும், அனைவரிலும் கிறிஸ்துவின் மீது அன்பையும் நீதியின் மீது ஆர்வத்தையும் வளர்க்கவும் Praise Tabernacle சபை அழைக்கப்பட்டுள்ளது. ஆராதனை, சாட்சி, மற்றும் ஊழியம் மூலம் சபையினருக்கும் சமூகத்தினருக்கும் தேவையுடையவர்களுக்கு சேவை செய்து, அவர்களை அன்புடன் அணைத்துக்கொள்ள கிறிஸ்துவுக்காக நம்மை அர்ப்பணிக்கிறோம். சுவிசேஷம் அறிவிக்கப்பட வேண்டும், இழந்தோர் கண்டுபிடிக்கப்பட வேண்டும், விசுவாசிகள் பலப்படுத்தப்பட வேண்டும், ஏழைகள் சேவிக்கப்பட வேண்டும், தனிமையில் இருப்போர் சமூகத்தில் இணைக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் நிலைத்திருக்கிறோம்.
Read our beliefs, denominational affiliation, and church history.எங்கள் நம்பிக்கைகள், மத இணைப்பு, மற்றும் சபை வரலாறு பக்கங்களைப் பார்க்கலாம்.
We serve Tamil and English families, newcomers, youth, and anyone looking for hope, comfort, and a place to belong.தமிழ் & ஆங்கில குடும்பங்கள், புதியவர்கள், இளைஞர்கள், நம்பிக்கை மற்றும் ஆறுதல் தேடும் அனைவருக்கும் நாங்கள் சேவை செய்கிறோம்.
We follow Jesus Christ and look to the Bible for guidance. Our goal is simple: love God, love people, and grow together.நாங்கள் இயேசு கிறிஸ்துவை பின்பற்றி, வழிகாட்டலுக்காக வேதாகமத்தைப் பார்க்கிறோம். எங்கள் நோக்கம் எளியது: தேவனை நேசித்து, மனிதர்களை நேசித்து, ஒன்றாக வளருவது.
If it’s your first time, you’re welcome. We’ll help you feel comfortable and answer any questions.இது உங்கள் முதல் வருகை என்றாலும், வரவேற்கிறோம். உங்களுக்கு வசதியாக இருக்க உதவுவோம்; கேள்விகள் இருந்தால் பதிலளிப்போம்.
A service focused on Jesus, with clear teaching and encouragement for everyday life.இயேசுவை மையமாகக் கொண்ட ஆராதனை; தெளிவான போதனையும் தினசரி வாழ்க்கைக்கான ஊக்கமும்.
We love being bilingual. You’ll find space for both languages and cultures.இருமொழி சபையாக இருப்பதில் மகிழ்ச்சி. இரு மொழிகளுக்கும் பண்பாடுகளுக்கும் இடம் உள்ளது.
Kids, youth, and newcomers are always welcome. Come as you are.குழந்தைகள், இளைஞர்கள், புதியவர்கள் அனைவரும் அன்புடன் வரவேற்கப்படுகிறார்கள். நீங்கள் இருப்பதுபோலவே வாருங்கள்.
Pastors and leaders serving our church family with prayer, care, and clarity.ஜெபம், பராமரிப்பு, மற்றும் தெளிவான வழிகாட்டுதலோடு சபைக்குடும்பத்தை சேவை செய்யும் தலைவர்கள்.

Serves our church family with prayer, clear Bible teaching, and pastoral care.ஜெபம், தெளிவான வேதாகமப் போதனை, மற்றும் மேய்ப்பர் அக்கறையுடன் எங்கள் சபை குடும்பத்தை சேவிக்கிறார்.
Supports worship gatherings and media so the message reaches people in-person and online.ஆராதனைகளையும் மீடியா சேவையையும் ஆதரித்து, நேரிலும் ஆன்லைனிலும் செய்தி சென்றடைய உதவுகிறார்கள்.
Serves students by building community and creating spaces to grow in faith together.இளைஞர்களுக்கான சமூகத்தை கட்டி எழுப்பி, ஒன்றாக விசுவாசத்தில் வளர இடங்களை உருவாக்கி சேவை செய்கிறார்கள்.
A quick timeline and where we fit within the wider Christian family.ஒரு சுருக்கமான காலவரிசை மற்றும் கிறிஸ்தவக் குடும்பத்தில் எங்கள் இடம்.
God gathers a small group of families with a desire to worship, pray, and grow in the Word together.தேவன் சில குடும்பங்களை ஒன்று சேர்த்து, ஆராதனை, ஜெபம், மற்றும் வேதத்தில் வளர விருப்பம் கொடுக்கிறார்.
Tamil and English families worship together as the church strengthens its ministries for kids, youth, and newcomers.தமிழ் மற்றும் ஆங்கிலக் குடும்பங்கள் ஒன்றாக ஆராதிக்க, குழந்தைகள், இளைஞர்கள், புதியவர்களுக்கான பணிகள் வலுப்பெறுகின்றன.
We continue to serve our city through worship, prayer, discipleship, and compassionate care.ஆராதனை, ஜெபம், சீஷத்துவம், மற்றும் கருணையுடன் பராமரிப்பின் மூலம் எங்கள் நகரத்திற்கு சேவை செய்கிறோம்.
We are an evangelical Christian church committed to Scripture, Christ-centred worship, and accountable leadership.நாங்கள் வேதத்தை அடிப்படையாகக் கொண்ட, இயேசுவை மையமாக வைத்த, பொறுப்புணர்வோடு சேவை செய்யும் எவாஞ்சலிக்கல் கிறிஸ்தவச் சபை.